இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவிவருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 490-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றால் மக்கள் பீதியடைந்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ தொழிலதிபர்கள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில், "கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் சுமையை இந்தியா சந்தித்துவருகிறது. இந்திய தேசத்துக்கும், உலகத்துக்கும் நெருக்கடியான இந்த நேரத்தில், கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தொழிலதிபர்களும், வணிகத் தலைவர்களும் உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.