தொடர் தோல்வியை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியை மீட்க, பிரியங்கா காந்தியை முன்னிறுத்த வேண்டும் என தொண்டர்கள் பலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.
கட்சியை மீட்கும் நோக்கில் நாடாளுமன்றத்திற்கு பிரியங்கா காந்தியை அனுப்ப வேண்டும் என மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நான்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.