தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2020, 8:01 AM IST

ETV Bharat / bharat

'உத்தரப் பிரதேச பணி தேர்வுக்குழு ஊழல் நிறைந்தது'- பிரியங்கா காந்தி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பணி தேர்வுக்குழு அமைப்பு மிகவும் ஊழல் நிறைந்தது. இதற்கு எதிராகப் பேசுவதற்கும், அமைப்பில் மாற்றங்களை செய்வதற்கும் மாநில இளைஞர்கள் உறுதியாக உள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

Priyanka Gandhi Uttar Pradesh government Uttar Pradesh recruitment machinery Yogi Adityanath உத்தரப் பிரதேசம் பணி தேர்வுக் குழு ஊழல் பிரியங்கா காந்தி காங்கிரஸ்
Priyanka Gandhi Uttar Pradesh government Uttar Pradesh recruitment machinery Yogi Adityanath உத்தரப் பிரதேசம் பணி தேர்வுக் குழு ஊழல் பிரியங்கா காந்தி காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் கல்வித் துறையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர், ஊழலுக்கு எதிராக பூஜ்ய சகிப்புதன்மை என்று சொல்பவர்கள் பெரிய மீன்களின் அபகரிப்புகளை பொறுத்து கொள்வதேன்? என கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி இந்தியில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உத்தரப் பிரதேச ஆள்சேர்ப்பு இயந்திரங்கள் (அரசு பணி தேர்வுக்குழு) ஊழல் நிறைந்தது. அதில், ஊழல், நியாயமற்ற விதிகள், குறைபாடுள்ள சமூக நீதிக் கொள்கை காணப்படுகிறது. ஆள்சேர்ப்பு மாஃபியாக்களால் அது நீதிமன்ற சிக்கலை சந்திக்கும்” என்று கூறியிருந்தார்.

மேலும், “மாநில இளைஞர்கள் இதனை பேசுவதில் உறுதியாக உள்ளனர். அவர்கள் இந்த ஆள்சேரப்பு முறையில் மாற்றத்தை கொண்டுவருவார்கள்” என்றார்.

இதையும் படிங்க: சொகுசு விடுதி அரசியல்: கிரிக்கெட், பொருளாதார ஆலோசனை.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிஸி..!

ABOUT THE AUTHOR

...view details