தனியார்மயமாகும் மின்துறை: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - புதுச்சேரி பாஸ்போர்ட் அலுவலகம்
புதுச்சேரி: மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மின்துறை ஊழியர்கள் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![தனியார்மயமாகும் மின்துறை: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:32:14:1603897334-tn-pud-05-eb-staff-arpattam-7205842-28102020192155-2810f-1603893115-839.jpg)
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து புதுச்சேரியில் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மீட்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.