தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் இன்று முதல் தனியார் டெம்போக்கள் இயக்கம் - ஊரடங்கு தளர்வு

புதுச்சேரியில் 6 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த டெம்போக்கள் இன்று முதல் இயங்கத் தொடங்கின.

tempo
tempo

By

Published : Oct 6, 2020, 10:29 PM IST

புதுச்சேரி: கரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. பின்னர் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதுச்சேரியில் தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் இயக்க சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்தது. புதுச்சேரியில் சில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கரோன காலத்தில் பேருந்துகளுக்கான வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் நுழைவதற்கு அனுமதி வழங்கபடாததால். கோரிமேடு எல்லைகளில் தமிழக பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட்டு வருகின்றனர். இதனால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த தனியார் டெம்போகள் இன்று முதல் இயங்கின. டெம்போகள் புதுச்சேரி தமிழக எல்லைப் பகுதியான கோரிமேடு பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றி சென்றன. இதனால் பயணிகள் ஆறுதல் அடைந்தனர்.

இதையும் படிங்க :ஹத்ராஸ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டவர்களுக்கு நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details