குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள மெடாஸ் ஆஃப் செவந்த் டே அட்வென்டிஸ்ட் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி கரோனா நோய்க் கிருமித் தொற்றினால் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும், உணவுகளும் வழங்கப்பட்டது. ஆனால், குணமடைந்து வீடு திரும்பும் வேளையில், அவருக்கு மருத்துவமனை தரப்பில் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தான் பிரமாதம்.
இண்டு இடுக்குகளில் உள்ள கரோனா வைரஸை அழிக்க உதவும் புற ஊதாக் கதிர் ட்ராலி
ஆம், இவரின் ரசீதில் 5 லட்சத்து, 80ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த வேண்டும் என்று இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்கான ரசீது மேலும், மருத்துவமனை தரப்பில், 'நோயாளியின் உறவினர்களிடம் கோவிட்-19 தொற்றின் சிகிச்சைக்கு இவ்வளவு செலவாகும்’ என்று முன்னதாகவே மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.