கரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஏழு மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதற்கிடையில், தளர்வுகளுடன் தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்ததும், சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்கவில்லை.
புதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்! - private buses resumes in pudhucherry
புதுச்சேரி: கரோனா காரணமாக கடந்த ஏழு மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த தனியார் பேருந்துகள் இன்று (அக்.22) முதல் இயக்கப்பட்டன.
![புதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்! private buses resumes](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9267990-311-9267990-1603347891532.jpg)
இந்த நிலையில் நேற்று (அக்.21) பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், இரண்டு காலாண்டுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்வதாக அரசு நம்பிக்கை தெரிவித்தது. அதன்படி இன்று முதல் (அக்.22) பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதுச்சேரி கனக செட்டிகுளம், கோரிமேடு, அரியாங்குப்பம் பாகூர் சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது 50 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸ் நியமனம்!