தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மது என எண்ணி சானிடைசரை அருந்திய கைதி மரணம்! - கோவிட் 19

பாலக்காடு: மது என எண்ணி சானிடைசரை அருந்தியதாக கருதப்படும் கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prisoner dies after drinking sanitizer in Kerala
Prisoner dies after drinking sanitizer in Kerala

By

Published : Mar 26, 2020, 8:57 PM IST

பிப்ரவரி 18 முதல் விசாரணை கைதியாக இருந்துவந்த நபர் சானிடைசர் அருந்தி உயிரிழந்திருக்கலாம் என சிறை அதிகாரி ராமன்குட்டி தெரிவித்தார்.

மேலும் அவர், மாநில அரசின் உத்தரவுப்படி இங்கு சிறைக் கைதிகள் சானிடைசர் தயாரித்து வருகின்றனர். அதை அவர் அருந்தியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம் என்றார்.

இதுகுறித்து சிறையின் மூத்த அதிகாரி, செவ்வாய் அன்று இரவு மிக இயல்பாக இருந்தார். புதன் கிழமை 10.30 மணியளவில் அவர் நிலைகுலைந்து போனார் என்கிறார்.

சிறை அலுவலர்கள் சானிடைசர் தயாரிக்க மூலப் பொருளாக ஐசோப்ரபைல் ஆல்கஹாலை பயன்படுத்துகின்றனர். காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கைதியின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனர். உடற்கூறாய்வுக்கு பின்னரே உயிரிழந்ததன் காரணம் தெரியவரும்.

ABOUT THE AUTHOR

...view details