தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கண்காணித்து வருகிறோம் - பிரதமர் மோடி

ஹைதராபாத்: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு விபத்து குறித்து உள்துறை அமைச்சக அலுவலர்களிடம் கேட்டறிந்தேன், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Modi
Modi

By

Published : May 7, 2020, 12:00 PM IST

விசாகப்பட்டினம், கோபாலப்பட்டினம் ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலி வினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து கசிந்த அபாயகரமான ரசாயன வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியுள்ளது.

உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி பொதுமக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டதுடன் பலர் மயக்கமடைந்துள்ளனர். இந்த வாயுவைச் சுவாசித்ததில் தற்போது வரை ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த அலுவலர்களுடன் இதுகுறித்து கேட்டறிந்தேன். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. அனைவரின் பாதுகாப்பு, உடல்நலத்திற்காக பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்

ABOUT THE AUTHOR

...view details