பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் தங்கள் பேச்சுகளில், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் இலக்கியங்களை, குறிப்பாக திருக்குறளை மேற்கொள்காட்டி காட்டி பேசிவருகின்றனர்.
சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் சுமார் 30 விழுக்காடு பகுதிகளை நீக்க மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
ஒன்பதாம் வகுப்பில் நீக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் பரவின. இதற்கு, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் கண்டங்களை பதிவு செய்தன.