மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க இருப்பதால் பாஜகவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
காசியில் வழிபாடு செய்த மோடி! - நரேந்திர மோடி
உத்தரபிரதேசம்: மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்தார்.
Modi
இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி, அங்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனையடுத்து, அங்கிருந்து சாலை வழியாக காசிக்குச் சென்ற அவர், காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட்டார். வாரணாசியிலிருந்து காசி சென்ற அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அவருடன் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இருந்தனர்.