கரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி நாள்தோறும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், சுகாதார வல்லுநர்கள், தன்னார்வலர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.
அந்த வகையில் இன்று பல்வேறு சமூகநல அமைப்புகளின் தலைவர்களோடும், அதன் முக்கிய பிரதிநிதிகளுடனும் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது, கரோனாவைத் தடுப்பது குறித்தும், கோவிட் 19-க்கு எதிராக ஆற்றவேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் தொடர்பாகவும் அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியதோடு ஆலோசனைகளையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
சமூகநல அமைப்பினரோடு பிரதமர் மோடி கலந்துரையாடல் மேலும், சமூகநல அமைப்பினரும் கரோனாவை எதிர்கொள்வது குறித்து தங்களது யோசனைகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரிப்பு