பிரதமர் நரேந்திர மோடி, லடாக்கில் உள்ள நிமு ராணுவத் தளத்துக்கு நேற்று முன்தினம் திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு சீன ராணுவத்தினருடனான மோதலில் வீரமரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் காயமடைந்த வீரர்களிடம் நலம் விசாரித்தார்.
குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு! - பிரதமர் மோடி குடியரசு தலைவருடன் சந்திப்பு
டெல்லி: குடியரசுத் தலைவரை பிரதமர் மோடி சந்தித்து தேசிய, சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தார்.
![குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு! Modi called on President Ram](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7900678-thumbnail-3x2-mkl.jpg)
Modi called on President Ram
இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய, சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போட்ஸ்வானாவில் தொடரும் பேரழிவு - 275க்கும் அதிகமான யானைகள் உயிரிழப்பு!