டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் கல்யாண்மார்க் இல்லத்தில் ஏராளமான மயில்கள் வளர்க்கப்படுகின்றன. மோடி தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது, மயில்களுக்கு உணவளிப்பது வழக்கம். அவ்வாறு மயில்களுக்கு உணவளிக்கும் நேரங்களில் எடுக்கப்பட்ட காணொலியை மோடி, தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
மயில்களுக்கு உணவளிக்கும் பிரதமர் மோடி - மயில்களுக்கு உணவு மோடி இல்லம்
டெல்லி: தனது இல்லத்தில் மயில்களுக்கு உணவு அளிக்கும் காணொலியை பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்தக் காணொலி சுமார் 1.47 நிமிடம் ஓடக்கூடியது. இதில், மோடி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, அங்கிருக்கும் மயில்கள் தோகையை விரித்து நிற்பது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. மயில்கள் தோகையை விரித்துக்கொண்டு, மோடி நடைப்பயிற்சியின் போது, அங்கும் இங்குமாக உலா வரும் காட்சியும் இடம்பெற்றுள்ளன.
கிராமப்புறங்களில் காணப்படுவதைப்போல், தனது வீட்டில் பறவைகள் கூடு கட்டிக்கொள்ளும் வகையில் உள்கட்டமைப்புகளை பிரதமர் மோடி, தனது இல்லத்தில் ஏற்படுத்தியுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.