இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "அனைவருக்கும் ஈதுல் பித்ர் என்னும் ரமலான் வாழ்த்துகள். இந்தச் சிறப்பான சந்தர்ப்பத்தில் மக்கள் அனைவரிடமும் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கத்தின் உணர்வு மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
'இரக்கம், நல்லிணக்க உணர்வு அதிகரிக்கட்டும்' - மோடி ரமலான் வாழ்த்து - பிரதமர் மோடி செய்திகள்
டெல்லி: ரமலான் திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, "இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்க உணர்வு அதிகரிக்கட்டும்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
prime-minister-modi
மேலும், தமிழ்நாடு முழுவதும் ரமலான் திருநாள் இன்று (மே 25) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும்' - ஆளுநரின் ரமலான் வாழ்த்து