தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ள பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலை கண்டிக்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது.
நக்சல்கள் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் - condemns
டெல்லி: சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்த நக்சல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி தனது கண்டனத்தையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்த பாஜக எம்எல்ஏ பீமா மந்தாவி கட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். ஒழுக்கமும், ஆற்றலும் கொண்ட அவர் சத்தீஸ்கர் மக்களுக்காக சேவை செய்திருக்கிறார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவ்தி கர்மாவிடம் இருந்து தண்டேவாடா தொகுதியை பீமா மந்தாவி கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் வருகின்ற ஏப்ரல் 11, 18, 23 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.