அண்ணல் காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டின் விவசாயிகளுக்கு அநீதி விளைவிக்கும் விதமாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்புச் சட்டங்களை இயற்றியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு முறைகூட அரசியல் சம்பந்தப்பட்ட தரப்பின் ஆலோசனை இல்லாமல் சட்டங்கள் இயற்றியதில்லை. ஆனால் இந்த மத்திய அரசு, தனக்கு இணக்கமான பெரும் முதலாளிகளுக்காக சட்டங்களை இயற்றி ஏழைகளை வஞ்சிக்கிறது. இதன் மூலம் பதுக்கல்காரர்கள் லாபம் அடைந்து, ஏழை விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பெரும் பாதிப்பை சந்திக்கவுள்ளனர் எனக் கவலைத் தெரித்தார்.