வடமாநிலங்களில் காற்று மாசு சிக்கல் அதிகரித்துள்ள நிலையில் வாரணாசியில் உள்ள சிவனுக்கு அங்குள்ள அர்ச்சகர்கள் முகமுடி அணிவித்துள்ளனர். நாடு முழுவதும் காற்று மாசு பிரச்னை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் ஏற்படும் மாசானது, வடமாநிலங்கள் முழுவதும் பரவி வருகிறது. அவசர நிலை அளவிற்கு மோசமடைந்துள்ள இந்த சிக்கலைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் தரப்படுகிறது.
இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் விரைந்து செயல்படுமாறு எச்சரித்துள்ளது. இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள துவாரகேஷ்வர் மகாதேவ் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்திற்கு அங்குள்ள அர்ச்சகர்கள் முகமூடி அணிவித்துள்ளனர்.