தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயநாட்டில் பள்ளி வகுப்பறையில் விஷப்பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு.! - வயநாட்டில் பள்ளி மாணவி உயிரிழப்பு

வயநாடு: வயநாட்டில் உள்ள ஒரு பள்ளியில் பள்ளி வகுப்பறையில் விஷப்பாம்பு கடித்ததில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மாநில உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுளளது.

The Parents Teachers Association has also been dissolved

By

Published : Nov 22, 2019, 5:50 PM IST

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சர்வஜனா பள்ளியில் படித்து வந்தவர் ஷேக்லா ஷெரீன். இவர் பள்ளி வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து வலியால் துடித்த ஷெரீனை ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஷெரீன் பரிதாபமாக உயிரிழந்தார். ஷெரீனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவ-மாணவர்கள் ஷெரீனின் மரணத்துக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் மாநில கல்வி துணை பொது இயக்குனர் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகியோரை பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

வயநாட்டில், சுகாதாரமற்ற முறையில் காணப்படும் பள்ளி.!
தொடர்ந்து கல்வி அலுவலர்கள் இன்று பள்ளியில் ஆய்வு நடத்தினர். அப்போது பள்ளி சுகாதாரமற்ற முறையில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்தும் பள்ளி நிர்வாகிகளிடத்தில் அவர்கள் விளக்கம் கேட்டனர். வகுப்பறைக்குள்ளேயே பாதுகாப்பு இல்லாமல் பள்ளி மாணவி ஒருவர் விஷப்பாம்பு கடிக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : பாசமான மணியனை குத்திக் கிழித்த யானைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details