தமிழ்நாடு

tamil nadu

திருக்குறளைச் சுட்டிக்காட்டிய ராம்நாத் கோவிந்த்

By

Published : Jan 31, 2020, 3:16 PM IST

டெல்லி: நாடளுமன்றத்தில் இன்று உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திருக்குறளைச் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

congress
congress

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், மார்ச் 2 தொடங்கி ஏப்ரல் 3 வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டம் இன்று தொடங்கியது.

இந்தக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றும்போது விவசாயத்தின் சிறப்பை உணர்த்தும் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

திருக்குறளைச் சுட்டிக்காட்டிய ராம்நாத் கோவிந்த்

இதனிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, குடியரசுத் தலைவரின் உரையில் புதிதாக ஒன்றும் இல்லை. பொருளாதாரத்தின் நிலைமை, வேலைவாய்ப்பின்மையை பற்றியும், வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்தும் உரையில் குடியரசுத் தலைவர் கூறவில்லை.

பல தொழிற்சாலைகள் மூடப்படுவது குறித்தும் உரையில் ஏதும் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை எனக் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதையும் படிங்க: சிஏஏ தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் - டிஆர் பாலு

ABOUT THE AUTHOR

...view details