தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட் கூட்டத்தொடர்: இன்று தொடங்குகிறது முதல் கூட்டம்

டெல்லி: நிகழாண்டின் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் கூட்டம் இன்று (ஜனவரி 29) தொடங்குகிறது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

By

Published : Jan 29, 2021, 7:58 AM IST

Updated : Jan 29, 2021, 8:36 AM IST

குடியரசு தலைவர்
President

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிகழாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.29) தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று பட்ஜெட் குறித்து உரையாற்றுகிறார். இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

முதல்கட்டமாக இன்று தொடங்கும் இக்கூட்டத்தை காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் 16 முக்கிய கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்கின்றன.

இதனிடையே, கரோனாவுக்கு பிந்தைய இந்திய பொருளாதாரத்தை அனைத்து பிரிவுகளிலும் மீட்டெடுக்கும் வகையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் திருப்பு முனையாக அமையும் என பாஜக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால், ’மோடி அரசு சீர்த்திருத்தங்களின் பாதையில் வெற்றி நடைபோடுகிறது. இந்த இக்கட்டான நிலையை அப்படியே விடாமல் புதிய மாற்றங்களை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜன் தன் யோஜனா, பிஎம் கல்யாண் யோஜனா ஆகிய திட்டங்களை தொடங்கினார். நல்ல பொருளாதாரமே நல்ல அரசியல்- இது தான் பிரதமர் மோடியின் குறிக்கோள்’ என்றார்.

கரோனா காரணமாக முன்னர் நடைபெற்ற கூட்டத்தொடர்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, மழைக்கால கூட்டத்தொடரில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் சபை உண்டு, இந்தமுறை அப்படியிருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தொடரில் ரத்து செய்யப்பட்ட கேள்வி நேரம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கூட்டத்தொடரைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். முதல் அமர்வு பிப்ரவரி 15 ஆம் தேதிவரை நடக்கிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெறும் குடியரசுத் தலைவர் உரையில் நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதாராம், கரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு விவகாரங்கள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்!

Last Updated : Jan 29, 2021, 8:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details