கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் நிவாரண நிதிக்கு பல பிரபலங்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த பணத்தை வழங்கி வருகின்றனர். அதன்படி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மார்ச் மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது ஊதியத்தில் 30 விழுக்காட்டினை ஓராண்டுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "மாளிகையில் புதிய கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் குடியரசுத் தலைவரின் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள், திட்டங்கள் கணிசமாக இந்தாண்டு குறைக்கப்படும். முக்கிய விழாக்களுக்குச் செல்வதற்கு லிமோசைன் சொகுசு கார் வாங்க ராம்நாத் கோவிந்த் திட்டமிட்டிருந்தார். தற்போது, அந்தத் திட்டத்தை ஒத்திவைத்துள்ளார்.