கடந்த 1961ஆம் ஆண்டு, டிசம்பர் 19ஆம் தேதி, போர்ச்சுகீசியர்களின் ஆளுகையிலிருந்து கோவா விடுதலை பெற்றது. கோவாவின் 60ஆவது விடுதலை தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு நாள் பயணமாக அங்கு செல்லவுள்ளார்.
கோவா செல்லும் குடியரசுத் தலைவர்! - கோவா செல்லும் குடியரசு தலைவர்
டெல்லி: கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு இரு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அம்மாநிலத்திற்கு நாளை செல்லவுள்ளார்.
குடியரசு தலைவர்
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "கோவாவின் 60ஆவது விடுதலை தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பனாஜிக்கு செல்லவுள்ளார். டிசம்பர் 19ஆம் தேதி அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.