நிதிநிலை அறிக்கைக் கூட்டு கூட்டத்தொடரில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். அப்போது, ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்கியதற்கும் அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதற்கும் அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மிகச் சிக்கலாக கருதப்பட்ட பல விவகாரங்கள் கடந்த சில ஆண்டுகளில் தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்குச் சில உரிமைகள் கிடைத்துள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.