கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 2,56,611 பேர் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகம், அமலாக்கத்துறை தலைமையகம் ஆகியவற்றில் பணிபுரிந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்திரிகை தகவல் மையத்தின் முதன்மை இயக்குநர் கே. எஸ். தத்வாலியாவுக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். முன்னதாக, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவதேகர் கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தத்வாலியா அவர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.