அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவங்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் நால்வரும் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்திறங்கிய அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தார். பின்னர், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்த மொதேரா கிரிக்கெட் மைதானத்தில் உரையாற்றினார்.
இதையடுத்து, மாலையில் விமானம் மூலம் ஆக்ரா சென்ற ட்ரம்ப், குடும்பத்துடன் தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியாவுக்கு வழிகாட்டியாக (கைடு) செயல்பட்டவருமான நித்தின் சிங், அவரது அனுபவம் குறித்து ஈ டிவி பாரத் ஊடகத்திடம் பேசினார்.