தெலங்கானா மாநிலத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் மூன்று லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகளை கண்டு 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால், பல மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் தற்கொலை விவகாரம்; அறிக்கை சமர்பிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு! - குடியரசு தலைவர்
ஐதராபாத்: 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்பிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
குடியரசு தலைவர்
இந்த விவகாரம் குறித்து தெலங்கானா பாஜக தலைவர் லக்ஷ்மன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த தகவல்களை அறிக்கையாக சமர்பிக்கக் கோரி தெலங்கானா தலைமை செயலருக்கு குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.