ஜனநாயகக் கடமையாற்றிய நாட்டின் 'முதல் குடிமகன்' - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
2019-05-12 09:21:04
இந்திய நாட்டின் முதல் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏப்ரல் 11ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 23ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 29ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவும், மே 6ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும் என சீரான இடைவேளையில் தேர்தல் நடத்தப்பட்டது.
ஏற்கனவே, 425 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், 59 தொகுதிகளுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. டெல்லி, பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்துவருகின்றனர்.
இந்நிலையில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.