தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைவர்கள் உருவாக்கிய சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம் - ராம்நாத் கோவிந்த் - The President addressed the people

டெல்லி: தலைவர்கள் உருவாக்கிய சுதந்திரத்தை நாம் அனைவரும் போற்றி கொண்டாடி மகிழ்வோம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

ramnath govind
ramnath govind

By

Published : Aug 14, 2020, 8:18 PM IST

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 74ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரன வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

இதில், "வணக்கம் நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். சுதந்திரமான தேசத்தின் குடிமக்களாக நாம் இருக்கிறோம் என்ற பெருமையை இந்திய இளைஞர்கள் இந்த நாளில் உணர்ந்திட வேண்டும்.

நமது சுதந்திர போராட்டத்தின் நெறிகள்தான் நவீன இந்தியாவின் அடித்தளமாக உள்ளன. சுதந்திர போராட்ட இயக்கத்தின் வழிகாட்டியாக மகாத்மா காந்தி அமைந்தது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டம். காந்தியை மீண்டும் வாசிக்கத் தொசங்கியிருப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு சுதந்திர திருநாள் கொண்டாடட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். இதற்கான காரணம் நீங்கள் அறிந்தது தான்.

அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி மோசமான கரோனா தொற்று பாதிப்பில் உலக நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. இந்த கரோனா பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை முன்களத்தில் நின்று எதிர்கொண்டே மருத்துவர்கள், செவிலியர்கள் இதர சுகாதார அலுவலர்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. சரியான கரோனா தொற்றின் தீவிரத்தை வெற்றிகரமாகக் குறைத்து நிறைய உயிர்களை காப்பாற்றியுள்ளோம்.

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். இந்த நெருக்கடியான சூழலில் மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உம்பன் சூறாவளி தாக்கியது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்ததால் உயிரிழப்புகள் குறைந்தபட்ச அளவுக்குள் கட்டுப்படுத்தப்பட்டன. நோய்த்தொற்றால், ஏழைகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் மீட்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு காலத்தில் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலம் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது. நாட்டில் மாதந்தோறும் 80 கோடி மக்களுக்கு 2020ஆம் ஆண்டு முடியும் வரை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் வெளிநாட்டில் சிக்கித் தவித்த 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் இந்த தேசம் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. நாம் அமைதியான வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஆக்கிரமிப்பு முயற்சிகள் எது நடந்தாலும் தகுந்த பதிலடி தரும் திறனும் நமக்கு இருக்கிறது.

2020ஆம் ஆண்டில் கடினமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதன்தான் இயற்கையின் அதிபதி என்ற மாயையை கரோனா வைரஸ் தகர்த்தெறிந்துள்ளது. கரோனாவை எதிர்கொள்ள நீங்கள் காட்டிய பொறுமையையும், அறிவையும் உலகமே பாராட்டுகிறது" என்றார்.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகும் ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details