17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கியது. மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரு அவைகளுக்கும் கூட்டாக உரை நிகழ்த்தவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரை
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தவுள்ளார்.
Ramnath govind
இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். ஜூலை 26ஆம் தேதி வரை மக்களவை 30 அமர்வுகளும், மாநிலங்களவை 27 அமர்வுகளும் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கியமான சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.