உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே என்கிற ஷரத் அரவிந்த் பாப்டேவை நியமிக்கும்படி குடியரசுத் தலைவரிடம் ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார்.