70ஆவது அரசியல் சாசன தினத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் அரசியல் சாசனத்தின் சிறப்பு காணொலியைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். அதன்பின் பேசிய கோவிந்த், ”இந்திய அரசியல் சாசன சிற்பி அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவின் அடித்தளம் இந்திய அரசியல் சாசனத்தில் அமைந்துள்ளது. தற்போதைய மக்களவையில் இதுவரை இல்லாதளவிற்கு அதிகபட்சமாக 78 பெண்கள் தேர்வாகியுள்ளனர். இது இந்திய ஜனநாயகத்தின் பெருமை.