தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்களின் கண்ணியத்தை காக்க உறுதி ஏற்போம் - குடியரசுத் தலைவர் ரக்சா பந்தன் வாழ்த்து - குடியரசுத் தலைவர்

டெல்லி: பெண்களின் கண்ணியம், மரியாதையை காக்க ரக்சா பந்தன் தினத்தில் உறுதி ஏற்போம் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த கூறியுள்ளார்.

Rakhi
Rakhi

By

Published : Aug 3, 2020, 1:10 PM IST

நாடு முழுவதும் இன்று ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டுவருகிறது. அண்ணன், தங்கை மற்றும் அக்கா, தம்பிக்கு இடையேயான உறவை போற்றும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.

பல தலைவர்கள் இதற்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், “பெண்களின் கண்ணியம், மரியாதையை காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ரக்சா பந்தனுக்கு வாழ்த்துகள். சகோதர, சகோதரிகளை அன்பு, நம்பிக்கையால் இணைக்கும் சிறப்பான பந்தத்தின் வெளிப்பாடே ராக்கி கயிறு. இந்நாளில், பெண்களின் கண்ணியம், மரியாதையை காக்க உறுதி ஏற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

சகோதரர்கள், சகோதரிகளுக்கு இடையேயான தனத்துவமான உறவை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ரக்சா பந்தன் அன்று, சகோதரிகள் தன் சகோதரர்களாக நினைப்பவர்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details