தமிழ்நாடு

tamil nadu

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நாயகன் வாஜ்பாய் : 96ஆவது பிறந்தநாள்

By

Published : Dec 25, 2020, 12:43 PM IST

டெல்லி : முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாள் இன்று (டிச. 25) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Atal Bihari Vajpayee
Atal Bihari Vajpayee

முன்னாள் பிரதமரும் பாஜகவை நிறுவியவர்களில் மிக முக்கியமானவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நாயகன்

மத்தியப் பிரதேசம், குவாலியரில் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், ஜனசங்கம் ஆரம்பித்தபோது முக்கிய நிர்வாகியாக இருந்தவர். பாஜகவைக் கட்டமைத்து, 1990களில் முதல்முறையாக காங்கிரஸ் இல்லாத கட்சியாக பாஜக ஆட்சி அமைக்க வாஜ்பாய் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

1998்ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலான கூட்டணி அரசாங்கத்தைக் கட்டியெழுப்பி, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தவர் வாஜ்பாய்.

பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்

நல்லாட்சி நாள்

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடம்

அடல் பிஹாரி வாஜ்பாயின் சேவைகளை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்தநாளான இன்றைய தினத்தை மத்திய அரசு நல்லாட்சி நாளாக அறிவித்து, கொண்டாடி வருகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்வீட்

பாரத ரத்னா

வாஜ்பாய்க்கு 2015ஆம் ஆண்டில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான ’கோவிந்த் பல்லப் பந்த் விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.

வாஜ்பாய் நினைவிடத்தில் அமித் ஷா மரியாதை

கார்கில் நாயகன்

வாஜ்பாய் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றி கண்டது. அதுமட்டுமின்றி அணுகுண்டு சோதனை, உலகத்தரமிக்க தேசிய நெடுஞ்சாலைகள் (தங்க நாற்கர சாலைகள்), அமெரிக்கா-சீனா உடனான நல்லுறவு, லாகூருக்கு பேருந்துப் போக்குவரத்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் எனப் பல திட்டங்கள், அவரது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.

2004 தேர்தல் தோல்விக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து அவர் முழுமையாக ஓய்வு பெற்றார். அவரது தொலைநோக்குப் பார்வையின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் பல சிகரங்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாஜ்பாய் வணங்கிய மதுரை சக்தி சின்னப் பிள்ளை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details