மாநிலங்களவை உறுப்பினர் கே.டி.எஸ்.துளசியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிந்துரைத்துள்ளார்.
ராஜ்ய சபா உறுப்பினராகும் ரஞ்சன் கோகோய்! - President nominates former CJI Ranjan Gogoi to Rajya Sabha
21:18 March 16
டெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிந்துரைத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தீபக் மிஸ்ரா இருந்தபோது, வழக்குகள் ஒதுக்குவதில் அவர் பாரபட்சமாக செயல்படுகிறார் என குற்றஞ்சாட்டி செய்தியாளர் சந்திப்பு நடத்திய மூத்த நீதிபதிகளில் இவரும் ஒருவர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவர் இருந்த போதுதான், அயோத்தி வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்பொறுப்பிலிருந்து ஓய்வுப்பெற்றார். பதவி காலத்தில் இவருக்கு எதிராக உச்ச நீதிமன்ற பெண் அலுவலர் ஒருவர் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தினார். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றக் குழு விசாரணை நடத்தி, ரஞ்சன் கோகோய் குற்றமற்றவர் என தெரிவித்தது.
பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ரஞ்சன் கோகோய் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.