தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாஸ்க் தயாரிக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி! - ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மனைவி சவிதா கோவிந்த்

டெல்லி: கரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி சவிதா கோவிந்த் முகக்கவசங்களை தயாரித்துள்ளார்.

sds
dsd

By

Published : Apr 23, 2020, 10:23 AM IST

Updated : Apr 23, 2020, 11:01 AM IST

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வையும், முகக்கவசத்தின் அவசியம் குறித்தும் மக்களுக்கு அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் காணொலி, குறும்படம் மூலம் எடுத்துரைத்துவருகின்றன.

அந்த வகையில், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி சவிதா கோவிந்த் களமிறங்கியுள்ளார். இவர் ஜனாதிபதி மாளிகையில், சிவப்பு நிறம் மாஸ்க் அணிந்துகொண்டு முகக்கவசங்களை தயாரிக்கிறார்.

இந்த முகக்கவசங்கள் அனைத்தும் டெல்லியில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சை - தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட வழிமுறைகள்

Last Updated : Apr 23, 2020, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details