தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பவன் குப்தா கருணை மனு நிராகரிப்பு - mercy plea

டெல்லி: நிர்பயா பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

பவன் குப்தா கருணை மனு நிராகரிப்பு  பவன் குமார் குப்தா, கருணை மனு, நிர்பயா பாலியல் வழக்கு  President Kovind rejects Nirbhaya gang-rape convict Pawan's mercy plea  mercy plea  Nirbhaya gang-rape convict Pawan's mercy plea
பவன் குப்தா கருணை மனு நிராகரிப்பு பவன் குமார் குப்தா, கருணை மனு, நிர்பயா பாலியல் வழக்கு President Kovind rejects Nirbhaya gang-rape convict Pawan's mercy plea mercy plea Nirbhaya gang-rape convict Pawan's mercy plea

By

Published : Mar 4, 2020, 2:42 PM IST

டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி ஆறு பேரால் பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்டு, பேருந்திலிருந்து தூக்கிவீசப்பட்டார்.

இந்த வழக்கில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் குற்றம் நடந்தபோது இளஞ்சிறார் என்பதால், அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

ஓட்டுநர் ராமன் சிங் என்பவர் திகார் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நால்வருக்கும் உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு, கடைசி நிவாரண மனு, குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவருகின்றனர்.

இவர்களின் மனுக்களை குடியரசுத் தலைவர் தொடர்ச்சியாக நிராகரித்துவருகிறார். மேலும் நீதிமன்றத்திலும் மனுக்கள் தள்ளுபடியாகிவருகின்றன.

இந்த நிலையில் பவன் குமார் குப்தா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இந்தத் தகவலை உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை பவன் குமார் குப்தாவின் கடைசி நிவாரண மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க :நிர்பயா வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details