நாட்டின் முதல் சட்டத்துறை அமைச்சரும், அரசியலமைப்பின் தந்தை என்றழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 129ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ராம்நாத் கோவிந்த வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். தேச தலைவரும் அரசியலமைப்பின் தந்தையான அவர் சமூகத்தில் நீதி, நியாயம் நிலைத்திட போராடினார். அவரின் கொள்கைகள், மதிப்புகளால் உத்வேகம் பெறுவோம். லட்சியங்களை உள்வாங்கி கொள்வோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.