மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்குவதற்காக அம்மாநில ஆளுநர் மாளிகையில் தங்கும் விடுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.
ஆளுநர் மாளிகையில் தங்கும் விடுதி - திறந்துவைத்தார் ராம்நாத் கோவிந்த்! - ராஜ் பவன் தங்கும் விடுதி
மும்பை: பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்கும் விடுதியை மும்பை ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்துவைத்தார்.

தங்கும் விடுதியை ராம்நாத் கோவிந்த் திறப்பு
இந்த விடுதியில் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட பிரத்யேகமாக அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விருந்தினரை சந்திப்பதற்காக இரண்டு வெவ்வேறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா கோவிந்த், அம்மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Last Updated : Aug 18, 2019, 3:03 PM IST