விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஆனால், எதிர்க்கட்சிகளில் எதிர்ப்புகளையும் மீறி செப். 20 ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தும், மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரியும் வலியுறுத்தினர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.