தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விஜயதசமி பண்டிகை: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து - Vijayadasamy Celebration

டெல்லி: விஜயதசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி தங்களது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

pm

By

Published : Oct 8, 2019, 10:09 AM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில், ''இத்திருவிழா தீமைக்கு எதிரான நல்ல வெற்றியின் கொண்டாட்டமாகும். இந்த விழா நேர்மை, உண்மைத் தன்மையுடன் உழைக்கத் தூண்டுகிறது. நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்'' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதேபோல்,பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டில், ”உலகம் முழுவதும் துர்கா பூஜை முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இச்சிறப்பான தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலிமை, துணிவு, கருணை ஆகிய பண்புகள் கொண்ட துர்கை அம்மனின் அருளை சமூகத்தின் நலனுக்காக வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details