இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் தாதாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று. இதையொட்டி, நாடு முழுவதும் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
'நவீன இந்தியாவின் வடிவமைப்பாளர் அம்பேத்கர்...!' - அம்பேத்கர்
டெல்லி: நவீன இந்தியாவைப் படைத்திட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் அம்பேத்கர் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம் கோவிந்த்
இந்நிலையில், நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில்,
'நமது நாட்டின் புகழ்பெற்ற அடையாளமும், அரசியலமைப்பின் முதன்மை வடிவமைப்பாளருமான டாக்டர் அம்பேத்கர், சாதிகள் பிற வேற்றுமைகளற்ற நவீன இந்தியாவை படைத்திட வாழ்நாள் முழுவதும் போராடியவர். ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களின் விடுதலைக்கும் உழைத்தவர்' என புகழாரம் சூட்டியுள்ளார்.
Last Updated : Apr 14, 2019, 10:05 AM IST