உலகம் முழுவதும் மிலாடி நபி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு மிலாது நபி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
மிலாடி நபி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர்! - மிலாடி நபி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர்
டெல்லி: மிலாடி நபியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
President
அன்பு மற்றும் சகோதரத்துவம் என்ற மகத்தான கொள்கையை உலகுக்கு அளித்து, மனிதநேய பாதையை நோக்கி முன்னின்று நடத்தியவர் முகமது நபிகள். சமத்துவம், மதநல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சமூகத்தை கட்டமைக்க விரும்பியவர் முகமது நபிகள்.
முகமது நபிகளின் போதனைகளின் படி, சமுதாயத்தில் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .