குளிர்காலம் தொடங்கிவிட்டதால் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது. வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை, தூசி ஆகியவற்றுடன் வேளாண் கழிவுகளை எரிப்பதால் வரும் புகையும் இணைந்துகொள்வதால் டெல்லியில் காற்று மாசு கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், டெல்லியுள்ள ஜஹாங்கிர்புரியில் மிக அதிகமாக காற்றின் மாசு அளவு 420ஆக உள்ளது. இதனையடுத்து அபாயக்கட்டத்தை நெருங்கியுள்ள காற்று மாசு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் புதிய விதிகளை கொண்டுவருகின்றன.
அந்த வகையில், டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக மத்திய அரசு ஆணையம் ஒன்றை நியமிக்க உள்ளது.