குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்று நேற்றுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த காலக்கட்டத்தில் அவர் மத்திய அரசின் 48 மசோதாக்கள், மாநில அரசின் 22 மசோதாக்கள் என 70 மசோதாக்களில் கையெழுத்திட்டுள்ளார். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் உள்ளிட்டவைகளும் அடங்கும்.
இதுதவிர 13 கட்டளைகளும் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் ராம்நாத் கோவிந்த் தினம்தோறும் ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் என 20 பேரை சந்தித்துவருகிறார். அந்த வகையில் இதுவரை 6991 பேரை சந்தித்துள்ளார். உள்நாட்டில் 21 முறை பயணம் செய்துள்ளார்.