ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்' (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் பொன்மொழியை பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஒளவையாரின் பொன்மொழியை குறிப்பிட்டு பேசிய மோடி! - ஒளவையார் குறித்து பேசிய மோடி
டெல்லி: கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் பொன்மொழியை பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.
Modi
இதுகுறித்து அவர் கூறுகையில், "கற்றது கையளவு கல்லாதது உலகளவு. அதேபோல்தான் இயற்கையும் ஆகும். அதிகம் கற்றுக் கொள்வதன் மூலம் தெரியாதவற்றை புரிந்துகொண்டு உணர்வீர்கள். மனித இனத்திற்கு வழங்கப்பட்ட புதையல் இயற்கையாகும். அதனை நாம் காப்பாற்ற வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பொய் முகத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் களம் காணுங்கள்' - மோகன் பகவத்துக்கு சவால்!