நாட்டின் நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி 4.8 ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச நிதியத்தின் தலைவரான கீதா கோபிநாத்தை பாஜக அமைச்சர்கள் விமர்சித்து கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் வளர்ச்சி 4.8 ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றுதான். வளர்ச்சி இதைவிட குறைவாக இருந்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன்.