பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு 2017ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உள்ளிட்ட சிலரை கேரள காவல் துறை கைது செய்தது. இந்த வழக்கு விசாரணையில் இதன் பின்னணியில் பிரபல மலையாள நடிகர் திலீப் மூளையாக செயல்பட்டதாகக்கூறி அவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க, நடிகை கடத்தலின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் அதனை எடுக்க பயன்படுத்திய ஃபோனையும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என திலீப் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.