சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா கிராமத்தில் சாலை வசதி கிடையாது. அதுமட்டுமல்லாமல் ஊரைவிட்டு வெளியேற அப்பகுதியிலுள்ள ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும். இந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆற்றை கடக்க கர்ப்பிணியை கூடையில் தூக்கிச் சென்ற அவலம் - arried on a makeshift basket to hospital
ராய்ப்பூர்: சாலை வசதி இல்லாததால் ஆற்றைக் கடக்க, கர்ப்பிணியை கூடையில் அமரவைத்து துக்கிச் சென்று சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
pregnant woman was carried on a makeshift basket through a river
சாலை வசதியில்லாததால், ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை. அதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கர்ப்பிணியை கூடை ஒன்றில் அமரவைத்து தூக்கிச் சென்று ஆற்றைக் கடந்துள்ளனர். அதையடுத்து அவர் மருத்துமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அதுகுறித்த காணொலி ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க... 'நண்பேண்டா' நல்ல நட்பைப் பாராட்ட ஒரு தினம் வேண்டும்தானே!