மகாராஷ்டிரா மாநிலம், காட்சிரோலி மாவட்டம், துர்ரிமர்க்கா கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஷ்னி போடாடி. கர்ப்பிணியான இவர் அடிப்படை மருத்துவ வசதிகளும், சாலை வசதிகளும் இல்லாத தனது கிராமத்திலிருந்து மருத்துவம் பார்ப்பதற்காக 23 கி.மீ., நடந்தே சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் முறையான மருத்துவ வசதிகளும், அடிப்படை சாலை வசதிகளும் கிடையாது. பிரசவ வலியால் அவதியுறும் பெண்களை அவசர ஊர்தி மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம் என எண்ணினாலும் அதற்கான சாலை வசதி கிடையாது. பேறு கால வலியால் தான் துன்புறக்கூடும் என எனது குடும்பத்தினரிடம் கூறியபோதும், அவர்கள் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி, தனது கிராமத்திலிருந்து 23 கி.மீ., தொலைவிலுள்ள லகாரி மருத்துவ மையத்திற்கு, காட்டு வழியாக நடந்தே வந்தடைந்தோம்’ என்றார்.